மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று வியாழன் கிழமை தேதி 17.12.2020,நல்ல நேரம் :காலை 10.45-11.45,மாலை 12.15-1.15,
ராகுகாலம் மாலை 1.30- 3.00,எமகண்டம் காலை 6.00-7.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்:
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைக்கான தகவல்கள் வந்துசேரும்.வேலைக்காக வெளியூர் செல்ல நேரிடலாம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.நீண்ட நாட்களாக குடும்பத்தைப் பிரிந்து இருப்பவர்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் அமையும்.குடும்ப சூழ்நிலை அமைதியா காணப்படும்.
ரிஷபம்:
பெற்றோர் ஆலோசனைகளை கேட்டு செயல்படுவது நல்லது.கணவன் மனைவி இடையே மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும்.திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகள் சிறிது தள்ளிப்போடுவது நல்லது.குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.குழந்தை பாக்கியம் போன்ற நல்ல செய்திகள் காதில் வந்தடையும்.
மிதுனம் :
சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் வந்தடையும்.சொத்துக்கள் வாங்குதல் மற்றும் விற்றல் தொடர்பான காரியங்களில் நன்மை நடக்கும்.குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கும்.
கடகம்:
உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.தொழில் விஷயத்தில் பிறரை நம்பாமல் நீங்களே முன்னெடுத்து இயங்கினால் நல்லது.சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் எளிதில் காரியங்கள் நிறைவேறும்.ஆரோக்கிய விஷயத்தில் கவனம் என்பது குறைவாகவே இருக்கும்.
சிம்மம்:
படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்தடையும்.கணவன்-மனைவி இடையே உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி:
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடும்.வாகன மற்றும் நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டு.பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.தொழில் ரீதியான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
துலாம்:
குடும்பத்தில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.பணிபுரியும் இடங்களில் மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள்.வாகன தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே உண்டான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
விருச்சிகம்:
குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும்.சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும்.நிறைய நாட்கள் தள்ளிப்போன காரியங்கள் இன்று நிறைவேறும்.வாகன மற்றும் நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டு.
தனுசு :
புதிய தொழில் வாய்ப்புகள் சிறிது தள்ளி போகும்.குழந்தைகளின் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.தொழில் ரீதியான போட்டிகள் கடுமையாக காணப்படும்.நிதி மற்றும் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.
மகரம்:
வாகன விஷயத்தில் செலவுகள் உண்டாகும்.நண்பர்களிடம் அதிக பாசத்தை வெளிப்படுத்துவீர்கள்.குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்து காரியத்தை தொடங்கினால் சிறப்பாக இருக்கும்.நிதி மற்றும் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.
கும்பம்:
குடும்பத்தில் மூத்தவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.தொடர் பயணங்கள் தொழில் விஷயத்தில் மேற்கொள்ள நேரிடும்.அலுவலகத்தில் மற்றும் தொழில் ரீதியாக சிறு தடைகள் ஏற்படும்.நிலம் மனை வீடு போன்ற விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
மீனம்:
.குடும்ப உறுப்பினர்களுடன் அன்பை பாராட்டுவீர்கள்.எதிர்காலத் திட்டங்களை திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நாளாக அமையும்.உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.வியாபாரத்தில் நல்ல பெற வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நன்மை அளிக்கும்.