முதல்வர் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பது மகிழ்ச்சியளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி பணம், நகையை கைப்பற்றியது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி” என்ற விமர்சனத்தை முன்வைத்தார். இதற்கு அரியலூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பதில் சொன்னார் முதல்வர்.
ஓய்வுபெற்ற பிறகு கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளதாகவும், 70 வயதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துகிறவர்கள் எல்லாம் அரசியல் செய்தால் என்ன ஆகும். பிக்பாஸ் பார்த்தால் ஊரிலிருக்கும் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது என்றும் குற்றம்சாட்டினார்.
read more: கூட்டணியெல்லாம் இல்லை, தனித்தே போட்டி: சீமான் அதிரடி!
எம்.ஜி.ஆரின் வாரிசு நான் என கமல் கூறி வரும் நிலையில், எம்.ஜி.ஆர் நாட்டு மக்களுக்கு பயன்படும்படி எவ்வளவு பாடல்கள் பாடியிருக்கிறார். ஆனால், கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு ஆக்கப்பூர்வமான ஒரு பாடலையாவது பாடியிருக்கிறாரா எனக் கேள்வி எழுப்பினார் முதல்வர்.
இந்த நிலையில் பிக்பாஸ் விமர்சனத்துக்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எம்.ஜி.ஆர் பாடலுடன் ஒப்பிட்டதற்கு, “சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்..ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை. அவர் எப்போதும் வால் பிடிப்பார்.`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்” என்ற எம்.ஜி.ஆர் பாடல் மூலமாகவே பதிலளித்தார் கமல்ஹாசன்.