சீனாவுடனான எல்லை மோதல் விவகாரத்தில் எதையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா :
தெலுங்கானா துண்டிக்கல் விமான படை அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்களுக்கான வழியனுப்பு விழாவில் கலந்துகொண்டு வீரர்களின் கூட்டு அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார்.அப்பொழுது அந்த விழாவின் போது உரையாற்றியபோது : லடாக் எல்லை பகுதியில் அத்துமீறிய சீன வீரர்களுக்கு இந்திய வீரர்கள் தொடர்ந்து தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.எல்லை பகுதியில் அமைதியை கொண்டுவர இரு தரப்பு பிரிவினர்களும் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டதற்கு உலக நாடுகள் பாராட்டும் நமக்கு அளித்தது என்றார்.
Read more – இன்றைய ராசிபலன் 20.12.2020!!!
மேலும்,இந்திய நாட்டிற்கு சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்பட்டால் எல்லை மோதல் விவகாரத்தில் எதையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.விமானப்படை அதிகாரிகளுடன் இணைந்து விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார்.