அடுத்த வருடம் இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் தனது சந்தையை விரிவுப்படுத்த அசத்தல் திட்டங்களை விரிவுப்படுத்தியுள்ளது.
அடுத்த வருடம் இந்திய சந்தையில் தனது விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருடம் சந்தையில் ஆப்பிள் விற்பனை எதிர்ப்பார்த்த அளவு இருந்ததால் இதை விட இன்னும் அடுத்த வருடம் சிறப்பாக இருக்க ஆப்பிள் திட்டம் வகுத்துள்ளது. ஐபோன்11, ஐபோன்12 போன்ற மாடல்களுக்கு பயனர்கள் இடையில் கிடைத்த வரவேற்பு மற்றும் சில ஐபோன் XR போன்றவற்றிற்கு விலை குறைப்பு இந்த காரணங்களால் விற்பனை இந்த வருடம் நன்றாகவே இருந்தது.
READ MORE- இந்த ஆண்டின் டாப்10 செயலிகள் என்னென்ன?
மேலும் இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் பிரீமியம் சந்தை 16 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இதில் ஆப்பிள் நிறுவனம் 50 நகரங்களில் 49ல் முன்னிலை வகித்தது. அந்த வகையில் ஆப்பிள் பலதரப்பட்ட பயனாளர்களை முன்வைத்து பல சலுகைகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.