பிக்பாஸ்ஸின் முதல் புரோமோவில் ஆரியை ரியோ கேள்வி கேட்கிறார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் பிக்பாஸ் ‘பால் கேட்ச்’ என ஒரு டாஸ்க் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் கார்டன் ஏரியவில் ஒரு பைப் லைன் ஜிக்ஜாக்காக வைக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சைஸ்களில் பால் வரும். சிறிய பந்துக்கு 5 மதிப்பெண்கள், பெரிய பந்துக்கு 10 மதிப்பெண்கள், அதை விட பெரிய பந்துக்கு 20 மதிப்பெண்கள்.
போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து வரும் பந்தினை பிடிக்க வேண்டும். இதில் யார் அதிகம் பிடித்து இருக்கிறார்களோ அந்த அணியே வெற்றியாளர்கள். இதில் பைப்பிற்கு நேராக பாலா, பாலாவுக்கு பின்னால் ஆஜீத், பாலாவுக்கு பக்கத்தில் ஆரி என இவர்கள் மூவருமே நிற்க மற்ற போட்டியாளர்கள் பந்தினை பிடிக்க முடியாமல் தடுமாறி விளையாடுகிறார்கள்.
இதை முன்வைத்துதான் ஆரிக்கும் ரியோவுக்கும் இடையில் வாக்குவாதம் தொடங்குகிறது. ‘எங்களை கேள்வி கேட்கறதுக்கு முன்னாடி உங்க டீம்ம கேளுங்க. பாலா செண்ட்டரா நிக்கறாப்ல, ஆஜீத் பக்கத்துல அப்புறம் எப்படி நான் விளையாடுவேன்?’ என ரியோ ஆரியிடம் டென்ஷனாக புரோமோ அதோடு முடிகிறது.
அர்ச்சனா, அனிதா, ரம்யாவை தொடர்ந்து ரியோவும் ஆரியை டார்கெட் செய்கிறாரோ என தோன்றுகிறது. ஆனால், உள்ளே போட்டியாளர்கள் ஆரியை டார்கெட் செய்ய செய்ய வெளியே அவருக்கான ஆதரவு அதிகமாகிறது என்பதுதான் உண்மை.