ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்ஃபோன்களை திருடியதாக அமேசான் நிறுவன ஊழியர்கள் வசமாக சிக்கியுள்ளனர்.
அமேசான் நிறுவனத்தின் குருகிராம் கிடங்கில் இருந்து மொபைல் ஃபோன்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்ஃபோன்கள் திருடியதாக அமேசான் நிறுவன ஊழியர்கள் கைதாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊழியர்கள் குறைவாக இருந்ததை தவறாக பயன்படுத்தி கொண்டார்கள் என்பதை இதன் காரணமாக சுட்டி காட்டியுள்ளனர். குருகிராம் கிடங்கில் இருந்து மொத்தம் 78 செல்ஃபோன்கள் திருடு போய் உள்ளது.
இவை அனைத்தின் மதிப்பும் ரூ. 1 கோடி என தெரியவந்துள்ளது. தங்களுக்கு கொடுத்த அனுமதியை ஊழியர்கள் தவறாக பயன்படுத்தி கொண்டனர் என்பதையும் சுட்டி காட்டியுள்ளனர். தற்சமயம் கைதானவர்களிடம் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான மொபைல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
READ MORE- வொர்க் ஃப்ரம் ஹோம் சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்!
இந்த ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு ஐஃபோன் வீதம் இரண்டு மாதங்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது அமேசான் நிறுவனத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.