பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் போட்டியாளர்களுக்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக டாஸ்க் கொடுத்திருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் நேற்று நடந்த ‘பால் கேட்ச்’ டாஸ்க்கின் மூன்றாவது பகுதிதான் இப்போதும் தொடர்ந்திருக்கிறது.
இதில் நேற்று போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி இருந்தார்கள். தற்பொழுது மூன்றாவது கட்டமான இதில் ஒவ்வொருவரும் தனித்தனியாக விளையாட வேண்டும். இது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தரும் மிகப்பெரிய வாய்ப்பு என போட்டி விதிமுறையில் சொல்லப்பட்டுள்ளது.
அதன்படி, ரம்யா, சோம், அனிதா, பாலா, ஆஜீத், ஷிவானி என போட்டியாளர்கள் ஒவ்வொருவருடைய பெயராக ப்ளாஸ்மா டிவியில் அறிவிக்கப்பட எல்லாரும் கார்டன் ஏரியாவில் வந்து பந்தை பிடிக்கி முயற்சி செய்கிறார்கள்.
இதில் பாலா ஓடி வந்த வேகத்தில் வழுக்கி விழுகிறார். சோம் இதில் நன்றாகவே நேற்றும் விளையாடி இருந்தார். இன்றும் புரோமோவில் தனக்கு வந்த பந்துகள் அனைத்தையும் பிடித்திருக்கிறார். இன்று என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.