அங்கீகரிக்கப்படாத லோன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி :
கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் குறைந்த வட்டியில் கடன்களைப் பெற பல செயலியை அணுகி செயலியின் மூலம் அதிகஅளவில் பாதிக்கப்படுகின்றனர்.
Read more – அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு : சென்னை திரும்புகிறார் ரஜினி ?
மத்திய ரிசர்வ் வங்கி கூறி இருப்பதாவது:-
ரிசர்வ் வங்கியில் பதிவு செய்த வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் மட்டுமே கடன்பெற வேண்டும். அடையாளம் தெரியாதவர்களிடம் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டாம். செயலி மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கூறி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.