வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துடன் இன்று குடியரசு தலைவரிடம் ராகுல் காந்தி மனு வழங்க இருக்கிறார்.
புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக பல எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2 கோடி மக்களிடம் வேளாண் சட்டங்களை எதிராக கையெழுத்து பெற்று வந்தது.
பொதுமக்களிடம் பெற்ற இந்த கையெழுத்துடன், வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக ஒரு மனு ஒன்றையும் அதனுடன் இணைத்து தொண்டர்களின் முன்னிலையில் இன்று(வியாழக்கிழமை) குடியரசு தலைவரிடம் ராகுல் காந்தி மனு வழங்க இருக்கிறார்.
Read more – இன்றைய ராசிபலன் 24.12.2020!!!
விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டத்தில் நீதி கிடைக்கவும்,வேளாண் மசோதா சட்டங்களை முழுவதுமாய் ரத்து செய்வது குறித்தும் குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு அந்த மனுவில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மனுவை அளிப்பதற்கு முன்பாக ராகுல் காந்தி, டெல்லி விஜய் சவுக் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகிறார்.இதில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.