ஜம்மு காஷ்மீரின் மக்களுக்கு இலவச சுகாதாரக் காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி :
ஜம்மு காஷ்மீரின் அனைத்து மக்களுக்கும் சுகாதார பாதுகாப்பை வழங்கும் வகையில், ஆயுஷ்மான் பாரத் ஜெய் செஹத் திட்டத்தை காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி மற்றும் ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் ஆகியோர் பங்கேற்றனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டை இத்திட்டம் வழங்குகிறது. ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரையில் காப்பீட்டை இந்த திட்டம் அளிக்கிறது. இந்த திட்டத்தின்கீழ் 229 அரசு மருத்துவமனைகள், 35 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
Read more – எல்லைதாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை படகுடன் சிறைபிடியுங்கள் : இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,
இந்த மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ள புற்றுநோயாளி ரமேஷ் லால் என்பவருடன் கலந்துரையாடினார். அப்போது, ஆயுஷ்மான் பாரத் உங்கள் வாழ்க்கையை ‘ஆயுஷ்மான்’ (நீண்ட ஆயுள்) ஆக்கியுள்ளது. இந்தத் திட்டம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து நீங்கள் சந்திக்கும் அனைவருக்கும் சொல்லுங்கள்’ என தெரிவித்தார் .