பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் கமல்ஹாசன் இந்த வாரம் நடந்த நிகழ்ச்சிகளை பேசியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் கமல்ஹாசன் இந்த வாரம் நடந்த நிகழ்ச்சிகளை பற்றி பேசியிருக்கிறார்.
READ MORE- ரஜினிகாந்த் இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்படுகிறாரா?
இதில் அனிதா ஆரி விவாதம்தான் முதலில் ஹைலைட் ஆகியிருக்கு. ’நீங்க தப்பு பண்ணறீங்க அப்படின்னு சுட்டி காட்டினா, நான் மட்டுமா தப்பு பண்ணறேன்னு திருப்பி கேக்கறாங்க. இன்னும் மூணு வாரம்தான் இருக்கு. அவங்க தப்பை அவங்க உணர்ந்தாங்களோ இல்லையோ நீங்க நல்லா புரிஞ்சு வச்சு இருக்கீங்கன்னு நீங்க ஓட்டு போறதுலயே தெரியுது.
மக்கள் தீர்ப்புதான் இறுதி. அதை அவங்களும் உணர்வாங்க’ என்று சொல்வதோடு புரோமோ முடிகிறது. இதில் இந்த வாரம் அனிதாதான் எவிக்ட் ஆக போகிறார் என தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பப்படுவாரா அல்லது சீக்ரெட் ரூம் இந்த சீசனில் இல்லையா என்பது இன்று எபிசோட் முடிந்த பிறகு தெரிய வரும்.