என்னை அவமானபடுத்தி ஜனநாயகம் குறித்து பாடம் கற்பிக்க விரும்புகின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லி :
ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னை அவமானபடுத்தும், சிலர் டெல்லியில் உள்ளனர். அவர்கள் எனக்கு ஜனநாயகம் குறித்து பாடம் கற்பிக்க விரும்புகின்றனர். அவர்களுக்கு, ஜனநாயகத்திற்கு உதாரணமாக, காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலை காட்ட விரும்புகிறேன்.ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் வாக்களித்துள்ளனர். மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் வெளியே வந்து வளர்ச்சிக்கு வாக்களித்தனர். மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ய பார்வையை ஜம்மு-காஷ்மீர் வென்றுள்ளது.
Read more – பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிக்க முதலமைச்சரிடம் ஆலோசனை : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
சில அரசியல் சக்திகள் ஜனநாயகம் குறித்து பாடம் நடத்துகின்றன . ஆனால், அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை அனைவரும் பார்க்க வேண்டும். அக்கட்சி ஆட்சி செய்யும் புதுச்சேரியில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. ஆனால், காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஒராண்டில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் நடந்த உள்ளாட்சி தேர்தல், ஜனநாயகத்தின் வேர்களை பலப்படுத்தும். இதில் பங்கெடுத்த காஷ்மீர் மக்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.