நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் என பலரும் நடித்திருக்கும் படம் ‘மாஸ்டர்’.
இந்த வருடம் சம்மர் ரிலீஸாக வெளியாக வேண்டியது ஆனால் கோவிட் சூழ்நிலை காரணமாக தள்ளி போனது. கடந்த மாதம் தீபாவளி அன்று படத்தின் டீசர் வெளியாகி பல சாதனைகளை படைத்தது. இதன் பிறகு 50 சதவித பார்வையாளர்களுடன் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளோடு தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
READ MORE- கமலுடன் மீண்டும் இணையும் பிரபுதேவா?
இதனையடுத்து ‘மாஸ்டர்’ எப்போது தியேட்டரில் ரிலீஸ் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்து வரும் நிலையில் பொங்கல் ரிலீஸ் செய்யலாம் எனவும் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க முதல்வரிடம் விஜய் அனுமதி கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் என்வும் நேற்று தகவல் வெளியானது.
இதனையடுத்து நேற்று ‘மாஸ்டர்’ படக்குழு படம் தொடர்பான அப்டேட் தர இருப்பதாக அறிவித்து இருந்தார்கள். அதன்படி ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு அதாவது அடுத்த வருடம் ஜனவரி 13 அன்று தியேட்டரில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்கள்.