டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை வசதியை கொடுக்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
டெல்லி :
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 34 நாட்களுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர் விவசாயிகள். இந்தப் போராட்டத்தில் இந்தியாவின் பெரும்பாலான மாநில விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், நாளை போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த உள்ளது.
பல்வேறு எதிர்கட்சிகள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், டெல்லியை ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி போராடி வரும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை (WIFI) இணைய வசதியை கொடுக்கவுள்ளது. அதனை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் உறுதி செய்துள்ளார்.
Read more – “ரஜினி சார் உங்களுடைய முடிவு தமிழர்களின் இதயங்களையும் உடைத்துவிட்டது” – நடிகை குஷ்பு ட்வீட்
“போராட்ட களத்தில் ஆம் ஆத்மி சார்பில் விவசாயிகளுக்கு இலவச வைஃபை வசதியை கொடுக்க முடிவு செய்துள்ளோம். அதன் ஒரு பகுதியாக அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் முதல் வைஃபை ஹாட்ஸ்பாட் அமைக்கப்படும்” எம்.எல்.ஏ ராகவ் சாதா என தெரிவித்துள்ளார்.