தலைநகர் டெல்லியில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 87 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,142 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதையடுத்து தலைநகரில் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,29,531 ஆக உள்ளது. ஆனால், 2,137 பேர் ஒரே நாளில் தொற்றிலிருந்து குணமடைந்தனர். மொத்தம் இதுவரை 1,13,068 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்.
தற்போது டெல்லியில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12,657 ஆக உள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 9.77 சதவீதம் பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரம் நாடு முழுவதும் 63 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 29 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மொத்தம் 3,806 பேர் பலியாகி உள்ள நிலையில் அங்கு கொரோனா மரண விகிதம் 2.93 ஆக உள்ளது.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் டெல்லி இந்தியாவிலேயே எட்டாவது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வரை டெல்லி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் 2ம் இடத்தில் இருந்தது.