பிக்பாஸ் புரோமோவில் கேபி மற்ற போட்டியாளர்கள் குறித்து தன் அம்மாவிடம் பேசி கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த வாரம் முழுக்கவே ஃபேமிலி ப்ரீஸ் டாஸ்க் போய் கொண்டிருக்க, இன்று கேபியின் அம்மா வந்திருக்கிறார். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ பாடல் ஓடிக்கொண்டிருக்க, அவர் அம்மா எண்ட்ரி கொடுக்கிறார்.
கேபி அம்மாவை பார்த்ததும் அழுது கண்லங்கி கட்டிப்பிடிக்கிறார். அவர் வரும்போது வாசலில் நின்றிருந்த ஷிவானியை பார்த்ததும் அழகா இருக்கா என கொஞ்சி கொண்டே உள்ளே போய் முதலில் ஆரியை பார்த்து ‘உங்களை ‘நெடுஞ்சாலை’ படத்தில் பார்த்திருக்கிறேன்’ என சொல்ல கேபி ஜெர்க் ஆகி ‘யூ ட்டூ ப்ரூட்டஸ்’ என சிரிக்கிறார். பின்பு கேபியிடம் அவரது அம்மா தனியாக பேசுகிறார்.
READ MORE-தனுஷின் ‘அத்ரங்கிரே’ படப்பிடிப்பு முடிந்தது!
‘நீ டாஸ்க் க்ரூப்பா பண்ணற. அது ஓக்கே. அதுல உன்னுடைய தனித்தன்மையை காட்டு’ என சொல்ல, ‘இங்க இருக்கவங்க பல சமயம் ப்ளையிண்டாவே இருக்காங்க. என்ன பண்ணினாலும் அவங்களுக்கு அது தெரியாது. பாராட்டுகளும் கிடைக்காது’ என சொல்ல, அதற்கு கேபி அம்மா, ‘அங்கதான் நீ உன்னுடைய கருத்துகளை எடுத்து வைக்கனும்’ என சொல்கிறார். அதற்கு, ‘அப்படி சண்டை போட்டு வாங்கனும்ன்னு எனக்கு தோணல’ என சொல்வதோடு புரோமோ முடிகிறது.




