விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற தயாராக இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை :
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசியதாவது :
வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என பாஜக அரசு தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். பாஜக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. மக்களுக்கு எதிரான திட்டங்களையே மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அவர்கள் கொண்டுவரும் சட்டங்கள் மற்றும் திட்டங்களை மக்கள் ஏற்க தயாராக இல்லை.
Read more – இன்றைய ராசிபலன் 02.01.2021!!!
ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பாஜக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற வாய்ப்பே இல்லை. அதிக இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க வேண்டும். அதிமுக- பாஜக கூட்டணி தமிழகத்தில் என்றும் எடுபடாது. அவர்களது கூட்டணி கட்டாய கல்யாணம் போன்றது. அடுத்துவரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.




