அன்பு வாசக உள்ளங்களுக்கு வணக்கம்.
ஒரு நூலை வாசகர்கள் படிப்பார்கள், கொண்டாடுவார்கள், விமர்சிப்பார்கள், பின் அடுத்த நூலை நோக்கி சென்றுவிடுவார்கள். ஆனால், எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி என்ற நாவலை படித்து ஆயிரக்கணக்கான வாசகர்கள் முகநூல் வாயிலாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் இணைத்தனர். பலர் முகநூலில் வேள்பாரியையொட்டி பின்கதைகள் எழுதினர். தமிழ்ச் சங்கமாக உருவெடுத்தனர். பல சேவைகளை செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து, அவர்களுக்குள் எழுத கூடிய திறமையானவர்களை கண்டறிந்து ஒரு சிறப்பு மலர் கொண்டு வந்தால் என்ன என்கிற எண்ணம் தோன்ற, அப்படி உருவானது தான் இந்த ஏழிலைப்பாலை சிறப்பு மலர்.
புத்தகம் வாசிப்பவர்களுக்கும், நேசிப்பவர்களுக்கும் ஒரு நற்செய்தி. ஏ4 அளவில் 250 வண்ணப்பக்கங்களில் பொங்கலன்று பூக்க இருக்கிறது ஏழிலைப்பாலை என்னும் மலர். எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நூலைப் படித்தவர்களுக்கு ஏழிலைப்பாலை என்கிற சொல் பரிச்சயமாகி இருக்கும். அந்நூலைப் படித்து சொந்தங்களாய் ஒன்று கூடிய வாசகர்கள் இணைந்து உருவாக்கும் நூல் இது.
ஓவியர் மணியம் செல்வத்தின் ஓவியம் அட்டைப்படத்தை வெளிவர, சாகித்ய அகாடமி எழுத்தாளர் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன், சித்த மருத்துவர் சிவராமன் ஆகியோரின் நேர்காணல்கள், கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் இசை, கவிஞர் கார்த்திக் நேத்தா ஆகியோரின் கவிதைகள், எழுத்தாளர் நீலா, பேச்சாளர் மானசீகன், மயிலன் சின்னப்பனின் சிறுகதைகள், சுந்தரராஜன், திருப்பதி வாசகனின் கட்டுரைகள் மற்றும் பல திறமையான எழுத்தாளர்களின் படைப்புகள் வெளிவருகின்றனர்.
உங்கள் ஊர் நூலகத்திற்கு நீங்கள் இந்நூலை பரிசளிக்க விரும்பினால் ஒரு நூலுக்கான பணத்தை செலுத்தி முன்பதிவு செய்தால் போதும். ஒரு நூல் உங்களுக்கு. ஒரு நூல் உங்கள் ஊர் நூலகத்திற்கு அன்பளிப்பாக அனுப்பி வைப்போம்.
பொங்கல் திருநாளை ஏழிலைப்பாலையுடன் இனிப்பாகக் கொண்டாடுங்கள். முன்பதிவு விலை 250/-. புத்தகங்களை முன்பதிவு செய்ய : 9944041999 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பணத்தினை G pay ல் செலுத்தலாம். பணம் அனுப்பியவர்கள் தங்களின் பெயர், அலைபேசி எண் மற்றும் முகவரியை வாட்ஸ் ஆப் மூலம் 9944041999 என்ற எண்ணுக்கு மறக்காமல் தெரியப்படுத்தவும்.