முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சவாலை ஏற்று விவாதத்திற்கு தயார் என அறிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சில வாரங்களுக்கு முன்பு சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட 8 அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் புகார்களை அளித்தார். இதுதொடர்பாக நேற்று பிரச்சாரத்தின் பேசும்போது பதிலளித்த முதல்வர், ஊழல் குற்றச்சாட்டுக்காக கலைக்கட்ட ஆட்சி இந்தியாவிலேயே திமுக ஆட்சிதான் என விமர்சித்தார்.
அத்துடன், திமுக ஆட்சியில் ஊழல் எங்கே நடந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விவாதத்துக்கு நான் தயாராகவே இருக்கிறேன். ஸ்டாலின் துண்டு சீட்டு எதுவும் இல்லாமல் விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அழைத்தார்.
இதற்கு காட்டமாக பதிலடி கொடுத்த திமுக தலைவர் ஸ்டாலின், இந்தியாவிலேயே ஊழலுக்காக சிறைக்குப் போன முதல்வரைக் கொண்ட கட்சி, ஊழலுக்காக முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, என்றும் மாறாத ஊழல் கறை படிந்த கட்சி அதிமுகதான். முதல்வராக இருக்கும் பழனிசாமியும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் தான் என்றார்.
‘வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததாக என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கும் நானே அனுமதி தருகிறேன். விசாரணைக்கு உத்தரவிடுங்கள்’ என்று தமிழக ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் இன்றைக்கே எழுதுங்கள் என்று முதல்வருக்கு வலியுறுத்திய ஸ்டாலின்,
“அடுத்த நிமிடமே விவாதத்திற்கு தேதி குறியுங்கள், எந்த இடம் என்று சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும் உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள். முடிந்தால் ஓ. பன்னீர்செல்வம் அவர்களையும் அழைத்து வாருங்கள்” என்று அழைப்பும் விடுத்தார்.
read more: பெண்களை இழிவுபடுத்துவதா? உதயநிதியை கண்டித்த தினகரன்
மேலும், ஊழல் பற்றி விவாதிப்போம். அரசு கஜானாவில் பத்தாண்டு கால ஆட்சியில்- குறிப்பாக நான்காண்டு கால உங்களது ஆட்சியில் எப்படி கொள்ளையடித்து சுரண்டி உள்ளீர்கள் என்ன கமிஷன் வாங்கி உள்ளீர்கள், என்ன கலெக்ஷன் செய்துள்ளீர்கள், எப்படிப்பட்ட கரெப்ஷன் செய்துள்ளீர்கள் என்பதை கிழித்துத் தோரணமாக தொங்க விடுகிறேன். நான் ரெடி, முதலமைச்சர் மிஸ்டர் பழனிச்சாமி நீங்கள் ரெடியா? என சவாலும் விடுத்தார்.