சோனியின் வயோ லேப்டாப் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ப்ளிப்கார்ட் நிறுவனம் தனது தளத்தில் சோனி நிறுவனத்தின் வயோ பிராண்ட் லேப்டாப்கள் மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
முன்னதாகவே வயோ பிராண்ட் தனது லேப்டாப்கள் ஜனவரி 15ல் அறிமுகம் என சொல்லியிருந்தது. அதற்கேற்றாற் போல ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் அறிவித்துள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் முதலில் பிரத்யேகமாக விற்பனை நடக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.
READ MORE- வாட்ஸப்பின் புதிய விதிமுறைகள், ஆபத்து யாருக்கு?
லேப்டாப்பில் இளம் தலைமுறையினரை கவரும் நோக்குடனும், வயோவுக்கென தனி இடத்தை உருவாக்கும் முனைப்புடனும் உள்ளதாகவும் இதற்கு வயோவின் இந்திய அறிமுகம் இதில் சிறப்பாக செயல்படும் எனவும் வயோ நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.