மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
வேளாண் சட்டம் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டம் தொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடியுமா என்பது தொடர்பாக மத்திய அரசிடம் கேட்டு தெரிவிக்குமாறு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலிடம் அறிவுறுத்தினார். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வாதங்களை வைக்குமாறு வழக்கறிஞர்களிடம் தலைமை நீதிபதி கூறினார்.
வேளாண் சட்டத்துக்கு எதிராக மனுதாக்கல் செய்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா இந்த விவகாரத்தில் மத்திய அரசு சட்டத்தை திரும்ப பெற விருப்பமில்லாத நிலையில் உள்ளது. எனவே பேச்சுவார்த்தை மற்றும் விவசாயிகளின் கருத்தை கேட்க ஏற்படுத்தப்படும் குழு முன்பு செல்ல விவசாயிகள் விரும்பவில்லை என கூறியுள்ளனர்.. எனவே குழு பயன் தராது என்றார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி நாங்கள் விவசயிகள் நலன் மற்றும் அவர்களின் நிலத்தை பாதுகாப்போம்…இது தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எட்ட வேண்டும் என்பதே விருப்பம் எனவே தான் குழு ஏற்படுத்த வேண்டும் என்கிறோம் அங்குள்ள (விவசாயிகளிடம் உள்ள) கள நிலவரம் தெரிய வேண்டும், அதை குழு அறிக்கையாக சமர்பிக்கட்டும் வேளாண் சட்டங்களை அமல் படுத்த இடைக்கால தடை விதிக்க எங்களால் முடியும்.
ஆனால், வேளாண் சட்டங்களை அமல் படுத்துவதை மத்திய அரசு நிறுத்தி வைக்க முடியுமா? என்பதை மத்திய அரசிடம் கேட்டு தெரிவிக்க தலைமை வழக்கறிஞரை கேட்டுள்ளோம். இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக குழு அமைப்பதை இந்த உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எங்களை தடுக்க முடியாது. நாங்கள் நிச்சயமாக ஒரு குழுவை அரசியல் சார்பில்லாமல் அமைப்போம் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கோரிக்கைகளை இந்த குழுவின் முன்பாக ஒவ்வொருவராக எடுத்து சொல்ல வேண்டும் அதை விடுத்து வெறுமனே இந்த சட்டங்களை எந்தவித விசாரணையும் நடத்தாமல் ரத்து செய்வதை விரும்பவில்லை.
இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வு காண வேண்டுமென விரும்புகிறார்களோ அவர்கள் நாங்கள் அமைக்கும் குழுவின் முன்பு சென்று கோரிக்கையை வைக்கட்டும். இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்கான குழுவை நாங்கள் அமைக்க போகிறோம் அது நீதிமன்ற அலுவல்களின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்றார். அதேவேளையில், குடியரசு தினத்தன்று விவசாயிகள் மோற்கொள்ளவிருக்கும் டிராக்டர் பேரணியை தடை செய்ய வேண்டும், பேரணியை அனுமதிக்கக்கூடாது என்ற டெல்லி காவல்துறையின் மனு மீது பதிலளிக்க விவசாய சங்கங்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டதோடு, வழக்கு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்