மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு ராஜாஜி மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுவருகிறது. மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று(வியாழன் கிழமை) 14 ம் தேதி அவனியாபுரத்தில் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து (நாளை) 15 ம் தேதி அலங்காநல்லூர் மற்றும் 16 ம் தேதி பாலமேடு ஆகிய மூன்று இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Read more – சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் 2022 ல் தொடங்கும் : இந்திய விமான நிலைய ஆணையம் தகவல்
இந்தநிலையில் , பொங்கல் பண்டிகையையொட்டி இன்று காலை 8 மணியளவில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிடுவதில் போட்டி ஏற்பட்டு அது மோதலாக மாறியது.
காளைகளை அவிழ்த்துவிடுவதில் ஏற்பட்ட தகராறில் அருண்குமார் மற்றும் தெய்வேந்திரன் ஆகிய இருவருக்கும் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.