சீனாவில் ஐஸ் கிரீம் மூலம் கொரோனா தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
பிஜீங்:
சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் வுகான் நகரில் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவி உலகம் முழுவதையும் இன்று வரை ஆட்டி எடுக்கிறது. இந்த கொரோனா வைரஸானது வௌவ்வால் மூலம் பரவியதாக தகவல்கள் வெளியாகியது.
மனிதர்களிடையே பரவியதை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் கொரில்லா மற்றும் சிங்கம் போன்ற விலங்குகளிடையும் பரவியது குறிப்பிடத்தக்கது. சீனாவின் டியன்ஜின் மாநகராட்சியில் ஐஸ் கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அந்த தொழிற்சாலைக்கு பால் பவுடரானது நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டது.
Read more – நாடுமுழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி : விவரங்கள் அறிய “டோல் ப்ரீ ” எண் வெளியீடு
அந்த ஐஸ் கிரீம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளது. இதனால் உடனடியாக அந்த ஐஸ் கிரீம் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டு,அங்கு வேலை பார்க்கும் யாரேனும் ஒருவரிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது,ஐஸ் கிரீம் மூலமும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் சீன மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டு வருகிறது.