இந்திய சந்தையில் ஒப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட்ஃபோன் விலையை குறைத்துள்ளது.
இந்திய மொபைல் சந்தையில் ஒப்போ நிறுவனம் தனது ஏ12 ஸ்மார்ட்ஃபோன் விலையை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு சில்லறை வர்த்தக நிலையங்களில் மட்டுமே அமலுக்கு வந்த நிலையில் இன்னும் ஆன்லைன் வர்த்தகத்தில் அப்டேட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
REA MORE- அமேசான் ப்ரைம் வீடியோவின் மொபைல் எடிஷன் அறிமுகம்!
கடந்த ஆண்டு ஜூன் மாத துவக்கத்தில் அறிமுகமான ஒப்போ ஏ12 ஸ்மார்ட்ஃபோன் ரூ. 9990 விலைக்கு விற்பனையானது. அதன்பிறகு ரூ. 1000 குறைந்து ரூ. 8990 க்கு விற்பனை ஆகி பின்பு தற்போது மீண்டும் விலை குறைக்கப்பட்டு ஒப்போ ஏ12- 3ஜிபி+ 32 ஜிபி மாடல் ரூ. 8490க்கு விற்பனை ஆகிறது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
சிறப்பம்சங்கள்:
- 6.22 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளே
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- மீடியா டெக் ஹீலியோ பி35 பிராசஸர்