பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் ரூ.589 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
சென்னை :
போகி பண்டிகை, பொங்கல் மற்றும் காணும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 3 நாட்களில் ரூ.589 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகையன்று 147 கோடியே 75 லட்சம் ரூபாய், 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று 269 கோடியே 43 லட்சம் ரூபாய் என 2 நாட்களில் மொத்தம் 417 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகி இருந்தது.
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13, 14 மற்றும் 16 ஆகிய மூன்று தேதிகளில் தமிழகத்தில் மொத்தம் 589 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது சுமார் 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருந்தது. இந்த ஆண்டு கொரோனா காலகட்டம் என்பதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.