பட்டா போட்டே பழகியதால் எம்.ஜி.ஆர். எங்களுக்கு மட்டும் சொந்தம் என அதிமுகவினர் கூறுகிறார்கள் என்று கமல்ஹாசன் பேசியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற விழாவில் “காலத்தை வென்றவன்” என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

விழாவில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், குழந்தை பருவத்தில் பரமக்குடியில் உள்ள தியேட்டரில் எம்.ஜி.ஆர் படங்களை பார்த்தால்தான் இரவு உணவு சாப்பிடுவேன் .எம்.ஜி.ஆர்- ன் நீட்சி என நான் எப்படி சொல்லலாம் என கேட்கிறார்கள், எம்.ஜி.ஆர் வீட்டில் உணவருந்திய யார் வேண்டுமானாலும் சொல்லலாம், நான் சொல்லலாம். எம்.ஜி.ஆர் க்காக இரத்தம் சிந்திய பல பேர் இன்று அமைதியாக உள்ளனர் காலம் வரும் போது அவர்களும் பேசுவார்கள்.

அதிமுகவில் சிறியதாக பயன்படுத்திய எம்.ஜி.ஆர் படம் இன்று பெரிதளவில் பயன்படுத்தப்படுகிறது, இதற்கு நான்தான் காரணம் இதுவும் எம்.ஜி.ஆரின் நீட்சிதான் என அவர் தெரிவித்தார். அவர் இல்லாத இல்லாமை என்ற கனவின் நீட்சியாக நான் ஏன் இருக்க கூடாது. எம்.ஜி.ஆருக்கு இளைமை பருவத்தில் வந்த அரசியல் ஆசை எனக்கு இப்போது வந்துள்ளது. நான் அரசியலுக்கு வரும் என்னுடை வாத்தியாரை நினைக்க கூடாதா என கேள்வியெழுப்பிய அவர், அரசியலில் என்னுடைய வாத்தியாரின் நீட்சியாக உள்ளேன் என கூறினார்.

அரசியல் ஆதாயத்திற்காக ராமாபுரம் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் இந்த ஆவண படத்தை வெளியிடவில்லை. விஸ்வரூபம் படத்தின்போது அதிமுக அரசு என்னை நடுத்தெருவில் நிற்க வைக்க பார்த்தது. எம்.ஜி.ஆர் யாரையும் மரியாதை குறைவாக பேசியத்தில்லை; நானும் யாரையும் மரியாதை குறைவாக பேசமாட்டேன். மாண்புமிகு என்ற பட்டத்தை நீங்களே பயன்படுத்த கூடாது; அதை மக்கள் வழங்க வேண்டும் மீண்டும் எம்.ஜி.ஆர் வீட்டிற்கு பெரிய பதவியில் இருக்கும் போது வருவேன் என கமல்ஹாசன் தெரிவித்தார்




