’RRR’ பட அப்டேட் வெளியாகியுள்ளது.
’நான் ஈ’, ‘பாகுபலி’ என பல ஹிட் படங்களை தமிழ் மற்றும் தெலுங்கில் கொடுத்தவர் இயக்குநர் ராஜமெளலி.
இவரது இயக்கத்தில் அடுத்து சுமார் 400 கோடி பட்ஜெட்ல உருவாகிட்டு வர கொண்டிருக்கும் படம் ’RRR’. ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண், அலியாபட் என பலரும் நடிக்க இருக்கும் இந்த படம் ஃபிக்ஷனல் கதையாக சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை அடிப்படையாக கொண்டு வரும் இது எனவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா சூழல் காரணமாக இடையில் படப்பிடிப்பு நின்று போனது. இதன் பிறகு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளோடு படம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
READ MORE- ‘மீண்டும் காதலிக்கிறேன்’- மனம் திறந்த ஷ்ருதிஹாசன்!
இதனையடுத்து இந்த வருடத்திற்குள் படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வருடம் அக்டோபர் 13 அன்று படம் வெளியாகும் என அப்டேட் படக்குழு கொடுத்துள்ளது.