இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து சிதறத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்தோனேசியா :
இந்தோனேசியா நாட்டில் புவித்தட்டுகள் தொடர்ந்து வருவதால் அடிக்கடி அங்கு நிலநடுக்கங்கள் சுனாமி மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே, கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு அதிக மக்கள் தொகையை கொண்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமெரு எரிமலை வெடிக்க தொடங்கியது.
Read more – ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் வேதா நினைவில்லமாக மாற்றம் : திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இந்தநிலையில், மேலும் ஒரு உலகில் மிகவும் ஆபத்தான எரிமலைகளில் ஒன்றான இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து சிதறத் தொடங்கியுள்ளது.மத்திய ஜாவா மாகாணத்தில் 9 ஆயிரத்து 721 அடி உயரம் உள்ள மெராபி எரிமலை வெடித்துச் சாம்பலை உமிழ்ந்து வரும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
எரிமலை வெடிப்பு காரணமாக அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பான இடத்திற்கும் செல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.