இந்திய சந்தையில் மூன்றாம் காலாண்டில் ஜியோ நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களோடு அசத்தியுள்ளது.
இந்திய சந்தையில் மூன்றாம் காலாண்டில் ஜியோ நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களோடு அசத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்படி, டிசம்பர் 31ம் தேதி வரையில் அதாவது மூன்றாம் காலாண்டு வரையில் ஜியோ நிறுவனம் 2.51 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
இதற்கு முக்கிய காரணங்களாக ஜியோ இந்த வருடம் முதல் ஜியோ உள்நாட்டு வாய்ஸ்கால் சேவையை இலவசமாக வழங்க தொடங்கியது, விதிகளில் தளர்வு மற்றும் ஸ்மார்ட்ஃபோன் விற்பனை அதிகரிப்பு போன்றவை சொல்லப்படுகிறது.
முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது ஜியோ 15.5 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை இல்லாத அளவு இது டெலிகாம் சந்தையில் அதிக வளர்ச்சி ஆகும்.
READ MORE- இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் 5ஜி? #LatestReporton5G
ஜியோவின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தற்போது 41.08ஆக உள்ளது. அதேபோல டேட்டா பயன்பாடும் முந்தைய ஆண்டை விட 28.4 சதவீதம் அதிகம் ஆகும்.