வருகின்ற பிப்ரவரி 8 ம் தேதி முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புக்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை :
தமிழக அரசு சார்பில் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
தமிழகத்தில் பிப்ரவரி 28 ம் தேதி நள்ளிரவு வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 8 ம் தேதி முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புக்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். மேலும், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8 ம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
Read more – வீட்டை காலி செய்வதற்கு பயந்து தாயின் சடலத்தை 10 ஆண்டுகளாக மறைத்து வைத்த மகள் : மிரண்டு போன அக்கபக்கத்தினர்
தமிழகம் முழுவதும் இனி பெட்ரோல் பங்க்குகள் நேரக்கட்பாடுகள் இன்றி இயங்கலாம் எனவும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள் செயல்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மத்திய அரசின் அனுமதிப்படி நாளை முதல் அனைத்து திரையரங்குகளிலும் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம் எனவும், இராமேஸ்வரத்தில் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




