பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலாவின் காரில் அதிமுக கொடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்தார் சசிகலா. கடந்த 27-ந் தேதி விடுதலை ஆனாலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை தேறி வந்ததை அடுத்து அவரை டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சசிகலா மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய காரை பயன்படுத்தினார்.

அதில் அதிமுக கொடி இருந்தது. மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை காண ஏராளமான தொண்டர்கள் இருந்தனர். சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்ட விரோதம் என்று அதிமுக அமைச்சர்கள் பலர் குற்றம் சாட்டி இருக்கின்றனர். ஆனால் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் தான் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். டிஸ்சார்ஜ் ஆன சசிகலா உடனே தமிழகம் திரும்பவில்லை. அவரை ஒரு வாரம்தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற டாக்டர்களின் அறிவுறுத்தி இருக்கின்றனர். அதனால் பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி சசிகலா ஓய்வெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.




