தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு இந்தமுறை பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லை. எனவே நடப்பாண்டு எப்படியாவது இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று பா.ஜ.க தீவிரமாக களத்தில் இறங்கி வருகிறது. அதன்படி நடப்பாண்டு பட்ஜெட்டில் இந்த மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கிறது.
இந்த மாநிலங்களுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாயில் சாலைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில் மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், அசாமில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 கோடி ரூபாயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கணிசமான வாக்குகளை பெற பா.ஜ.க அரசு பட்ஜெட்டில் நிதியை கூடுதலாக ஒதுக்கி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.