“ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து” என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
‘நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மறப்போம், மன்னிப்போம் என்ற உயரிய கருத்தை மனதில் கொண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கி ஆணையிட்டவுடன், இயதியாவிலேயே முதல் மாநிலமாக, தமிழ்நாட்டிலும் ஊதியக்குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளை உரிய காலத்திலேயே பெற்று, ஒரே மாதத்தில் அதனை பரிசீலித்து, மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வையும் வழங்கி ஆணையிட்டது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு புறந்தள்ளியது இல்லை. அரசின் இந்த நல்ல முடிவை ஏற்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கல்விப் பணியை தொடர வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.