ஒப்போ A15s ஸ்மார்ட்போனின் 4GB + 128GB மாடல் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒப்போ ஏ12எஸ் ஸ்மார்ட்போனின் புதிய ஸ்டோரேஜ் மாடலாக 4 ஜிபி ரேம் 128 ஜிபி ஆப்ஷன் இந்தியாவில் ரூ.12490 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்போ நிறுவனம் இதே ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் 64 ஜிபி ஸ்டோரேஜ் சில மாதங்களுக்கு முன்பு ரூ.11,490 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஒப்போ ஏ 15 எஸ் ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் அளவிலான வாட்டர் டிராப் டிஸ்ப்ளேவை 89% என்கிற அளவிலான ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் எச்டி + ரெசல்யூஷன் மற்றும் 720 x 1600 பிக்சல் ஆகியவற்றுடன் கொண்டுள்ளது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதன் பின்புறத்தில் கைரேகை ரீடரையும் கொண்டுள்ளது.
கலர்ஓஎஸ் 6.1-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆண்ட்ராய்டு 9.0 பை மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சத்தையும் கொண்டுள்ளது. 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 155.9 x 75.5 x 8.3 மிமீ மற்றும் 165 கிராம் எடையைக் கொண்டுள்ளது.