10 மாத இடைவெளிக்கு பிறகு நேரடி வழக்கு விசாரணைக்காக நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளாதால், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை ஆகியவற்றில், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி பிப்ரவரி 8ஆம் தேதி முதல் வழக்குகளின் விசாரணையை நேரடியாக மேற்கொள்வது என நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தலைமை பதிவாளர் குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதேபோல வழக்கறிஞர்கள் விரும்பினால் கானொலி காட்சி மூலமாகவும் ஆஜராகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும் நேரடி வழக்கு விசாரணையை பொறுத்தவரை இறுதிவிசாரணை வழக்குகள் மட்டுமே காலை மாலை என இரு வேலைகளிலும் நடைபெறும் என்றும், மற்ற வழக்குகள் கானொலி மூலமாக மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி உயர்நீதிமன்றம் என்று முழுமையாக திறக்கப்பட்டு இருக்கிறது இருந்தபோதிலும் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞரை திறக்கப்படாதது வழக்கறிஞர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழமை நீதிமன்றங்கள் முழுமையாக திறக்கப்பட்டாலும், உயர்நீதிமன்றத்தை பொருத்துவரை ஒரு சில வழக்குகள் நேரடி விசாரணை முறையிலும், மற்ற வழக்குகள் காணொலி காட்சி மூலமும் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.