சசிகலாவுக்கு கார் வழங்கியவர், வரவேற்பு அளித்தவர்கள் என ஏராளமானவர்களை நீக்கி ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். கூட்டாக உத்தரவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதால், சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் எஸ்.ஆர்.சம்பங்கி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் துணைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, சந்திரசேகர ரெட்டி, ஜானகி ரவீந்திர ரெட்டி, நாகராஜ், பிரசாந்த் குமார் ஆனந்த் ஆகிய ஏழு பேரும் கட்சியின் அடிப்படை பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா விடுதலை செய்யப்பட்டதில் இருந்து அவருக்கு ஆதரவாக தமிழகத்தில் போஸ்டர்கள் அடித்த பலரையும் கட்சி தலைமைக்கழகம் நீக்கி உத்தரவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.