பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக வந்திருந்ததால் கூட்டணி குறித்து பேசவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தபின் ஐ.என்.எஸ். அடையாறு தளத்தின் முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலைமைச்சர் பிரதமரை தனியாக சந்தித்த போது மாநிலத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்து மட்டுமே பேசப்பட்டது என்றார். பிரதமர் தொடங்கிவைத்த திட்டங்கள் ஒரு வரலாற்று சாதனை என்று குறிப்பிட்ட அவர், வட சென்னையில் மெட்ரோ ரயில்திட்டம் தொடங்குவது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கூறி, தொடங்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதன் மூலம் வட சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றார். தமிழக விவசாயிகள் குறித்து மோடி புகழாரம் தெரிவிக்கும் அளவிற்கு தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்றார்.