பிரதமர் மோடியிடம் தமிழர்கள் பிரச்சினைகளை குறித்து முதல்வர் பழனிசாமி பேசினாரா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகப்பட்டினம் :
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதால் தேர்தல் களம் தொடர்ந்து சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், திமுகவின் சார்பில் நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்று பரப்புரை மேற்கொண்டார். அப்பொழுது பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்ட அவர், அதிமுக அரசு கமிஷன் பெற்றே ஐந்து லட்சம் கோடி கடன் தமிழகத்தில் கடன் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Read more – சசிகலா தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்.. வெல்வதே எங்கள் லட்சியம்.. டி.டி.வி. தினகரன்
அதனைத்தொடர்ந்து, மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு பெற்ற திட்டங்களை பட்டியலிட முடியுமா? அந்த திட்டங்கள் என்ன? தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி ஷோ காட்டுகிறார். மதுரையில் எய்ம்ஸ் எங்கே என்பதே நான் கேட்கும் முதல் கேள்வி என்று கேட்ட அவர், எய்ம்ஸ் குறித்து பிரதமரிடம் முதல்வர் கேள்வி எழுப்புவாரா? அல்லது பிரதமர் மோடியிடம் நீட் தேர்வு விலக்கு மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழக பிரச்னைகள் தொடர்பாக முதல்வர் பேசினாரா ? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.