பார்வைக் குறைபாடு உள்ள நாயை கவனித்துக் கொள்வதற்காக ஒருவர் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார் லக்னோவைச் சேர்ந்த இளைஞர்.
கொரோனா நேரத்தில் சாலையில் படுகாயமடைந்த ஒரு நாயை மீட்டுள்ளார் இளைஞர் மிலிந்த் ராஜ். ஜோஜோ என்ற பெயரிடப்பட்ட அந்த நாயை மர்ம நபர்கள் தாக்கியதில் நாயின் காதுகேட்கும் திறனும், பார்வைத்திறனும் பறிபோய் இருக்கிறது. கடுமையான தாக்குதலை சந்தித்த ஜோஜோ, மனிதர்களைக் கண்டாலே பயந்து ஓடியுள்ளது. இதனால் இளைஞர் மிலிந்த் ராஜ், ஜோஜோவை பராமரிக்க ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த ரோபோ சரியான இடைவெளியில் ஜோஜோவுக்கு உணவு ஊட்டும். கவனித்துக்கொள்ளும். ஒரு உயிருக்கும், டெக்னாலஜிக்கும் இடையேயான அழகான உறவாக இது பார்க்கப்படுகிறது. ட்ரோன் மேன் என்று அழைக்கப்படும் மிலிந்த் ராஜ், முன்னாள் குயரசுத்தலைவரும், ஏவுகணை நாயகருமான அப்துல்கலாமிடம் விருது பெற்றுள்ளார். ரோபோ தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உடையவர். இவர்,