பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இரகசிய அறை ஒன்றினுள் இருந்து கிலோ கணக்கில் தங்கம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 10-ஆம் வட்டாரத்தில், இருக்கும் புகைப்பட கலையம் ஒன்றின் பின்னால் இருக்கும் ரகசிய அறையில் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கடந்த புதன் கிழமை போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார், கலையகத்தினை சுற்றி அ திரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு தங்க நகைகள், அதிக விலை கொண்ட ஆடம்பர கற்ககள், கைக்கடிகாரங்கள் மற்றும் 100000 யூரோவுக்கும் அதிகமான ரொக்கப்பணம் போன்றவை கண்டுபிடித்துள்ளனர்.
அதன் பின் இந்த பொருட்களின் உரிமையாளர் யார் என்று விசாரித்துள்ளனர். அப்போது யார் என்ற உண்மை வெளிவராததால், போலிசார் இது குறித்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், முதற்கட்ட விசாரணையாக, கலையகத்தில் காவலரான பணிபுரிந்து வரும் இலங்கையைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் Oise நகரில் வசித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.