திமுக வெற்றி பெற்றுவிடும் என தெரிந்துமே அதிமுக பணிகளை மேற்கொண்டு வருவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை :
பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய- மாநில அரசை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது,
ஒரு ஆட்சி முடிவுக்கு வரும்போது தான் இதுபோன்று செய்திகள் வரும். அதுபோல தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் மறைமுகமாக உயர்ந்து வருகிறது என்று தெரிவித்தார். மேலும், தேர்தலின்போது பெட்டியில் கை வைக்கலாம் என பாஜக எண்ணலாம். ஆனால் பெட்டியில் கை வைக்க இது உத்திரபிரதேசமோ, பீகாரோ இல்லை. இது தமிழ்நாடு” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.