பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :
பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் 1 லிட்டர் விலை 100 யை கடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர்.
தற்போது இந்த விலை ஏற்றம் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தலைமையில் நாணயக் கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அவற்றின் மீது விதிக்கப்படும் மறைமுக வரியைக் குறைக்க வேண்டும் என கூறினார் .
Read more – அட கை தட்டுங்களேன்.. பாவம் அண்ணன் சீனிவாசன் மட்டும் தட்டுறாரு.. கைதட்டலை கேட்டு வாங்கிய ஓபிஎஸ்
மேலும், விலை உயா்வால் பொருளாதாரத்தில் ஏற்படும் அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க, செயல்திறன் மிக்க விநியோகச் செயல்பாடுகள், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மறைமுக வரிகளை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த முறையில் படிப்படியாக குறைப்பது நன்மை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.