தமிழகத்தில் 9,10,11 ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை :
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் வெளியிட்டார். அதில், 2020-2021 ம் கல்வியாண்டில் தமிழகத்தில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மே 3 ம் தேதியிலிருந்து தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more – மோடி வருகைக்கு மெட்டு அமைத்த பா.ஜ.கவினர்.. வாங்க மோடி.. வணக்கங்க மோடி..
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இந்த ஆண்டும் 9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 60 ஆக உயர்வு என அறிவித்துள்ளார். வரும் மே 31-ஆம் தேதிக்குள் ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வுவயது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 59ஆக உள்ளது.