அமமுக செயற்குழுக் கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் முதல்வர் வேட்பாளராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை :
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதால் தேர்தல் களம் தொடர்ந்து சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அமமுக செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்ற அந்த தீர்மான கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் முதன்மையாக அமமுக எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு தவறான நபர்களின் சுயநலத்தில் சிக்கியிருக்கும் நம்முடைய அதிமுகவை மீட்டெடுத்து தமிழகம் தலைசிறந்து நிமிர்ந்திட செய்வோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Read more –புதிய கட்சியை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான்.. நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல்
மேலும், தமிழர்களின் வாழ்வு மலர்ந்திட தியாகத் தலைவி சசிகலா அவர்களினால் வாழ்த்துக்களோடு செயல்படும் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை தமிழக முதல்வர் சிம்மாசனத்தில் அமர வைக்க அயராது உழைப்போம் என்று சூளுரை எடுத்து அடுத்தகட்ட தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.




