பாரிசில் மூன்று வாரங்கள் முழு பொது முடக்கம் அமல்படுத்தப் போவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தற்போது 6 மணி வரை இருக்கும் ஊரடங்கால் மோசமான விளைவுகள் மட்டுமே ஏற்படுகிறது என்று மேயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆகையால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பாரிஸ் மேயரின் உதவியாளரான இம்மானுவேல் கிரேகோயர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகையால் பாரிஸ் மற்றும் அதன் வடக்கு மற்றும் தென் கிழக்கு மாவட்டங்களில் வரும் மார்ச் 6ஆம் தேதி முழு பொது முடக்கம் குறித்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது.
பாரிஸின் வடக்கு மற்றும் தென் கிழக்கு மாவட்டங்களில் வார தொடக்கத்திலிருந்து இறுதிவரை முழு பொது முடக்கம் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாரிஸில் இதற்கு ஒருபடி மேலாக மூன்று வாரங்கள் பொது முடக்கம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அரசு ஏற்றுக் கொண்டால் இதனை அமல்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.