ஆக்ஸ்போர்டு பல்லைக் கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி, முதற்கட்ட சோதனையில் நல்ல பலனை அளித்துள்ளதாக 20 விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன.
இதில் சில நிறுவனங்கள் மனிதர்களிடம் பரிசோதனை நடத்தும் நிலைக்கு வந்துள்ளன.இந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்லைக் கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி, முதற்கட்ட சோதனையில் நல்ல பலனை அளித்துள்ளதாக 20 விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை சிறப்பாக, கொரோனா தொற்றுக்கு எதிராக செயலாற்ற உதவுவது தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது முறை தடுப்பூசி செலுத்திய பின்னர் அதன் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், இந்த தடுப்பூசியை இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனையை மனிதர்களிடம் மேற்கொள்ள 5 இடங்கள் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது முக்கியமான முடிவு எனவும், இந்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் முன்பு அது தொடர்பான தகவல்கள் அரசிடம் இருக்க வேண்டியது அவசியம் என மத்திய பயோ உயிரியல் துறை செயலாளர் ரேணு சொரூப் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசியை தயாரிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அதன் கூட்டாளியான அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும், இந்தியாவின் சீரம் நிறுவனத்தை தடுப்பூசி உற்பத்திக்கு தேர்வு செய்துள்ளன.முதல் கட்ட சோதனையில் குறைவான அளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், இரண்டாவது கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு கட்டங்களாக சோதனை நூற்றுக்கணக்கான மக்களுக்கு நடத்தப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 2 கட்ட சோதனையிலும் மனிதர்களின் பாதுகாப்பு மற்றும் மனிதர்களின் நோய் எதிர்ப்புத் திறன் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்படுகிறது என்றும், அதனைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டமாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை தூண்டிவிடுவதில் இந்த தடுப்பூசி வெற்றி பெறும் நிலையில், கொரோனா தொற்றை பல ஆண்டுகளுக்கு எதிர்க்கும் திறன் நமது நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தில் தானாக உருவாகி விடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.