டிக்டாக் செயலிக்கு மாற்றாக BARS என்ற செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் சீன செயலிகளை அரசு தடைவிதித்தபோது சீன தயாரிப்பான டிக்டாக் செயலிக்கும் தடை அமலானது. ஷார்ட் வீடியோ மேக்கிங் அப்ளிகேஷனான் டிக்டாக் செயலிக்கு என இந்தியாவில் பயனர்கள் ஏராளம். அதையெல்லாம் ஒரே நொடியில் தடை என சொல்லி இந்திய அரசு தவிடு பொடியாக்கியது. அதன் பின்னர் டிக்டாக் செயலிக்கு மாற்றாக பல செயலிகள் அறிமுகமாகின. இருந்தாலும் அது ஏனோ டிக்டாக் செயலி கொடுத்த அனுபவத்தை கொடுக்கவில்லை என டிக்டாக் பயனர்கள் ஏங்கி நின்றனர்.
இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் கிட்டத்தட்ட டிக்டாக் போலவே செயல்படும் ஷார்ட் வீடியோ மேக்கிங் அப்ளிகேஷனான BARS அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளது. இந்த அப்ளிகேஷன் தற்போது பீட்டா வெர்ஷனாக வெளியாகியுள்ளது. பயனர்களின் கருத்துகளை அடிப்படையாக கொண்டு சில மாற்றங்களை கொண்டு வந்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஃபேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ளது.
RAP பாணியில் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி வீடியோ உருவாக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார்த்தைகளை ரேப் இசை பாணியில் மாற்ற இந்த அப்ளிகேஷன் உதவுமாம். ஃபேஸ்புக் நிறுவனத்தின் New Product Experimentation (NPE) R&D இதை வடிவமைத்துள்ளது. தற்போதைக்கு இது ஆப்பிள் போன் பயனர்களுக்கு மட்டுமே பீட்டா வெர்ஷனாக கிடைக்கிறது. விரைவில் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்காகவும் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.