சட்டசபை தேர்தல் களத்தில் திமுக சார்பில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி பிரியதர்ஷினி விருப்பமனு அளித்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைக்கு அதிமுக – பாமக கட்சிகளின் கூட்டணி மட்டுமே உறுதியாகி உள்ளது. பிற கட்சிகளின் பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் மட்டுமே இருக்கிறது.
மேலும், விருப்பமனு அளித்த வேட்பாளர்களை நேர்காணல் செய்து யார் யாருக்கு எந்த தொகுதிகள் வழங்கப்படும் என்ற குழப்பநிலையும் நீடித்து வருகிறது. இந்நிலையில் ‘களவாணி’ படத்தின் புகழ் நடிகர் விமலின் மனைவி பிரியதர்ஷினி மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனுவை அளித்துள்ளார்.
Read more – 8 தொகுதி ஜெயிச்சா போதும்.. மதிமுக இந்த உலகை ஆளும்… வைகோ அதிரடி பேட்டி
இதனைத்தொடர்ந்து மரியாதை நிமித்தமாக உதயநிதி ஸ்டாலினை நடிகர் விமல் மற்றும் அவரது மனைவி பிரியதர்ஷினி சந்தித்து பொன்னாடையை பரிசளித்தனர்.