ட்ரில்லியன் பொருளாதாரமாக தமிழகத்தை மாற்றாமல் விடமாட்டேன் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை :
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்த நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆட்சியில் அமர தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபடுகின்றனர்.
Read more – 5 தொகுதி தாருங்கள்… இல்லையென்றால் தனித்து போட்டியிடுவோம்.. அர்ஜுன் சம்பத் பேட்டி
சென்னை ஆழ்வார்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை மெட்ரோவில் பயணம் செய்த கமல்ஹாசன் அதன்பிறகு பரப்புரை வாகனத்தின் வழியாக ஆதம்பாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், நேர்மை என்ற ”இன்ஷியலை” மக்கள் நீதி மய்யம் வைத்துள்ளதால், மாற்றத்தின் முன்னணி படையாக நிற்கும் நாங்கள் மாற்றத்தை கொண்டு வருவோம் என்று தெரிவித்தார்.மேலும், தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற்றாமல் விடமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.




