திமுக – காங்கிரஸ் கூட்டணியில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை :
திமுக – காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு 4 கட்ட பேச்சுவார்த்தை கடந்தும் இன்னும் இழுபறியில் இருந்து வந்தது. திமுக தரப்பில் 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும், காங்கிரஸ் தரப்பில் 30 முதல் 40 தொகுதிகள் கேட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உள்ளிட்ட 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தற்போது கையெழுத்தாகி உள்ளது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியதாவது ;
தமிழக காங்கிரஸ் பல காலமாகவே சொல்லி வருகின்ற தத்துவம் மதசார்பற்றதன்மை. அதுதான் இந்த கூட்டணி என்பதை ஒரு நேர்கோட்டில் இணைத்து உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நோயாக பாஜக வளர்ந்து இருக்கிறது. அது நோயாக இருப்பது மட்டுமல்ல அந்த நோயை மற்றவர்கள் மீதும் பரப்புவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள். கரோனா வைரஸை விட ஆபத்தான ஒரு ஆயுதமாக அவர்கள் இன்று விளங்கி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
Read more – 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிவித்த சீமான்… வழக்கம்போல் தனித்துநின்ற நாம் தமிழர் கட்சி..
இந்தியாவில் பல்வேறு கட்சிக்குள் நோயை போல் பா,ஜ.க உள்புகுந்து கட்சிகளை அழித்து வருகிறது. பலவீனப்படுத்துவது அல்லது அதில் இருக்கிறவர்களை கட்சி மாற வைப்பது தான் இவர்களின் முக்கிய பணி என்றும் தெரிவித்தார்.